Top AD

Breaking News

உடலில் பயோ சிப் பொருத்திக் கொண்ட மக்கள்: எதற்கு தெரியுமா?

இப்போது வரும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது, ஆனாலும் சில தீமைகளும் உள்ளது என்று தான் கூறவேண்டும். பயோசிப் என்பது சிம் கார்டு போன்று இருக்கும் மிகச் சிறிய எலக்ட்ரானிக் பொருள் ஆகும், குறிப்பாக இதனை உடலில் எந்தப் பகுதியிலும் பொறுத்திக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.


அதன்படி தற்சமயம் ஸ்வீடன் நாட்டில் உள்ள மக்களில் 3,500 பேர் தங்களது உடலில் பயோ சிப் பொறுத்திக் கொண்டுள்ளனர், இது தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும்,பின்பு கடவுச்சீட்டு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனம்:
தற்சமயம் ஸ்வீடன் நாட்டில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று தங்கள் பணியாளர்கள் அனைவரும் இந்த பயோ சிப் பொறுத்தவேண்டும் என்று கூறியுள்ளது, இதனை ஏற்றுக்கொண்ட பணியாளர்கள் தாமாக முன்வந்து கைகளில் பையோ சிப்-ஐ பொருத்திக் கொண்டனர்.

விரல்:
இந்த பையோ சிப் பொறுத்திக்கொள்ள மருத்துவமணைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதன்படி நிறுவனத்தின்வேலை செய்யும் பணியாளர்களின் கைகளில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மருத்துவர்கள் பையோ சிப்-ஐ பொருத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீக்கமுடியும்:
பையோ சிப் பொறுத்தவரை பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் உடலில் இருந்து நீக்கிக் கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தனிநபரின் அனைத்துவிதமான தகவல்களும் அதில் அடங்கியிருக்கும்.

ஸ்வீடன்:
மேலும் இந்த பையோ சிப் ஸ்வீடன் நாட்டில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும், பின்பு இதுவரை 3,500 பேர் இந்த பையோ சிப்-ஐ பொருத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகமக்கள் இதனை அதிகமாக பொறுத்திக் கொண்ட நாடு என்ற பெயரையும் பெற்றுள்ளது ஸ்வீடன்.