Top AD

Breaking News

யாழில் மற்றுமொரு பயங்கரம்! கணவனின் கண் முன்னே மனைவி கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம்.

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் கணவனின் கண்முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.



வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடர்கள், இந்த கொடூரத்தை அரங்கேற்றி விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த வீட்டிற்குள் நுழைந்த இரு திருடர்கள் கணவனை கடுமையாக தாக்கியதுடன் அவரின் வாய் மற்றும் கைகளை கதிரையுடன் சேர்த்து கட்டி வைத்துள்ளார்கள். பின்னர் தொடர்ந்து மனைவியின் வாயை கட்டி வைத்து அவரை மிகவும் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள்.குறித்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் அனைத்திலும் கத்தியால் வெட்டி காயப்படுத்தியதுடன் வாய், தலை என்பவற்றில் பலமாக தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளார்கள்.இந்த சம்பவத்தில் 59 வயதான பெண்ணும் அவருடைய கணவரும் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இக் கொடூர சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்களுக்கு விசனம் வெளியிட்டுள்ளனர்.