Top AD

Breaking News

வயசானாலும் இளமையோடு அழகா இருக்கணுமா? மாதுளை சாப்பிடுங்களேன்....

மும்பஇளமையாகவும், உடல் பொலிவுடனும் தோன்ற வேண்டும் என விரும்புவோர் தங்களது தினசரி உணவில், மாதுளம்பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும், புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மாதுளை இன்றைக்கு பெரும்பாலோனோர் சாப்பிடுகின்றனர். அதன் நன்மைகள் தெரியாமலேயே சாப்பிட்டு வருகின்றனர். சிலரோ கிடைத்தும் சாப்பிடாமல் தவிர்த்து வருகின்றனர்.
மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகள் தொடர்பாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாதுளம்பழத்தில் யுரோலித்தின் ஏ என்ற பொருள், நம் உடலில் செல் சுத்திகரிப்பு மையமான மைட்டோகாண்ட்ரியாவில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தச் செய்கின்றன. இதன்மூலமாக, உடலில் உள்ள செல்கள் வயது முதிராமல் தொடர்ந்து, ஆற்றலுடன் செயல்பட முடிகிறது.
இதன்மூலமாக, நம் உடலுக்கும் வயதாவதை தவிர்ப்பதுடன், செல்கள் முதிராமல், பொலிவுடனும் தோன்ற உதவுவதாகவும், அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எனவே, மாதுளம்பழத்தை புறக்கணிக்காமல், தினமும் உண்ண மக்கள் முன்வந்தால், ஆரோக்கியமான நலவாழ்வு வாழ முடியும் என்றும், ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாதுளையில் உள்ள நன்மைகள் என்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
இரும்புச் சத்துக்கள்

மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்தச் சோகையைத் தடுக்க மாதுளம் பழங்கள் உதவும். மாதுளம் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட், பல்வேறு வகை புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது.

செரிமானத்திற்கு உதவும்
மாதுளம் பழம் 100 கிராம் சாப்பிட்டால் 83 கலோரி சக்தியே கிடைக்கும். அதேநேரம், மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது உணவு செரிமானத்துக்கு நல்லது. மாதுளம் பழத்தின் ஜூஸ், பாக்டீரிய எதிர்ப்பு நொதிகளை அதிகம் சுரக்கச் செய்யும். இது உணவு செரிமானத்துக்கு உதவும். அதனால்தான் வயிற்றுக் கோளாறுகளுக்கு மாதுளம் பழம் சாப்பிடப் பரிந்துரைக்கப்படுகிறது.



அழகை அதிகரிக்கும்

தோலில் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்து மாதுளம் பழம் சீரமைப்பதால், வடு ஏற்படுவதைத் தடுக்கலாம். மாதுளை முத்து சரும சுருக்கத்தைப் போக்கும். கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும்.
பளபளப்பு கூடும்

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.




சுருக்கம் நீங்கும்
மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.


பருக்கள் நெருங்காது

பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ் உடன் ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் உங்களை நெருங்க யோசிக்கும்!


உடல் ஆரோக்கியம்

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல.. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


சரும நோய்கள் நீங்கும்

கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.


நினைவாற்றல் பெருகும்

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.


கருப்பைக்கு வலுவூட்டும்

மாதுளைப்பழச்சாற்றாலிருந்து உருவாக்கப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி குருதி விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.