Top AD

Breaking News

வட மாகாண ஆளுநா் தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு !



வட மாகாண ஆளுநா் நியமனம் தொடா் இழுபறியாக உள்ள நிலையில்மிக சிறந்த ஒருவரை வடமாகாண ஆளுநராக நியமிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வடமாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மீண்டும் நியமிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் , தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை வட மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், முன்னாள் ஆளுநரும் யாழ்.கட்டளைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன், ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் சி.தவராசா, மற்றும் வரதராஜப்பெருமாள் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.