சூர்யாவின் அடுத்த படத்தில் ஆர்யா?
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவின் 37வது படமான இந்த படத்தில் நாயகியாக சாயிஷா நடித்து வருகிறார். மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ், பிரபல பாலிவுட் நடிகர் பொமன் இரானி மற்றும் சமுத்திரக்கனி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ஆர்யா தற்போது லண்டனில் 'சூர்யா 37 ப்டக்குழுவினர்களுடன் இருப்பதாகவும், அவரை பொமன் இரானி ஒரு புகைப்படம் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை ஆர்யா, தனது சமூக வலைத்தளத்திலும் உறுதிசெய்துள்ளார். எனவே 'சூர்யா 37' படப்பிடிப்பு தளத்தில் ஆர்யா இருப்பதால், ஆர்யா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால் முதல்முறையாக சூர்யா, ஆர்யா இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
