நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' சென்சார் தகவல்கள்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன்களும் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக நயன்தாரா-யோகிபாபுவின் 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சு' பாடல் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் 'கோலமாவு கோகிலா' படத்தின் சென்சார் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த பட்த்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதால் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.
